×

காங். கட்சியின் தேசிய தலைவர் கார்கேவை கொல்ல சதி: பாஜ வேட்பாளர் மிரட்டும் ஆடியோ வெளியானது

விசாரணை நடத்தப்படும் என முதல்வர் தகவல்

ஹூப்பள்ளி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்துவிடுவேன் என்று பாஜ வேட்பாளர் மிரட்டும் ஆடியோ வெளியாகியதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. நாளையுடன் பிரசாரம் ஓய்கிறது. இந்நிலையில், கலபுர்கி மாவட்டம் சித்தாபூர் பாஜ வேட்பாளராக மணிகாந்த ராதோட் போட்டியிடுகிறார். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியாங்க் கார்கே போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் பிரதமர் மோடியை நலநாயக் என்று விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினர். இதற்கிடையில் சித்தாபூர் மணிகாந்த் ராதோட் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதில், ‘மல்லிகார்ஜூன கார்கே, அவரது மனைவி, மகன், குடும்பத்தை கொலை செய்துவிடுவேன்’ என்று மிரட்டல் விடுக்கப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பாஜ வேட்பாளர் மணிகாந்த ராதோட், ஆடியோ ஒன்றை வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார். மல்லிகார்ஜூன கார்கேவை கொலை செய்ய சதி நடக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் ரன்தீப் சுர்ஜிவாலா, பாஜ வேட்பாளர் மணிகாந்த ராதோட் பேசும் ஆடியோவை வெளியிட்டுள்ளார். அதில் கன்னடத்தில் பேசும் அவர் மல்லிகார்ஜூன கார்கே, அவரது மனைவி, பிள்ளைகளை அழித்துவிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ராதோட் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்த ஆடியோ போலி. காங்கிரஸ் தோல்விபயத்தில் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியுள்ளது என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, ‘காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அவரது குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்படும். ஆடியோ குறித்து இதுவரை எதுவும் தெரியவில்லை. இதை அபாயகரமானதாக கருதி விசாரணை நடத்துவோம்’ என்றார்.

The post காங். கட்சியின் தேசிய தலைவர் கார்கேவை கொல்ல சதி: பாஜ வேட்பாளர் மிரட்டும் ஆடியோ வெளியானது appeared first on Dinakaran.

Tags : Karke ,Baja ,Chief Minister ,Hupalli ,All India Congress ,Malligarjun Karke ,Kong ,Paja ,
× RELATED பாஜக பெரும்பான்மை பெறுவதை I.N.D.I.A....